கோவை அருகே பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல்

21/11/2010 14:43

கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகரில் உள்ள தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் பள்ளிவாசல் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அருகே உள்ள குனியமுத்தூர் மூவேந்தர் நகரில் தாஜுல் இஸ்லாம் சுன்னத் ஜமா அத் கிளை பள்ளிவாசல் உள்ளது.

தினசரி மாலை நேரத்தில் மின் தடை ஏற்படும் நேரத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.

இதனையடுத்து, பள்ளிவாசல் துணைத் தலைவர் அசன், செயலாளர் ஹுசேன், பொருளாளர் அமானுல்லா ஆகியோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீஸ் உதவி கமிஷனர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினார். மேலும், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

oneindia.in