கொல்கத்தாவில் ரூ. 15 கோடியில் 10 ஆயிரம் பேர் தங்கக்கூடிய ஹஜ் டவர்

31/08/2010 09:37

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வர் கருணாநிதிக்கு, மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில்  ரூ. 15 கோடியில் 10 ஆயிரம் பேர் தங்கக்கூடிய ஹஜ் டவர் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்ஜி, கொல்கத்தாவில் ஹஜ் டவர் கட்ட  ரூ. 15 கோடி ஒதுக்கிய இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ. அபுபக்கருக்கும், முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியதற்காக தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.

இத்தகவலை அபுபக்கர் சென்னையில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Dinamani