கோவை கொலை வழக்கு: ஜான்பாண்டியன் உள்பட 5 பேர் விடுதலை

03/12/2010 12:23

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த விவேக் என்பவர் 1993ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வாக்கில் ஜான்பாண்டியன் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின், 11 பேர் மீது போலீசார் விசாரணை நடத்தி, கோவை செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் போது 2 பேர் இறந்துவிட்டனர். ஜான்பாண்டியன் உள்பட 9 பேர் மீதான வழக்கை கோவை செஷன்ஸ் கோர்ட் விசாரித்து, 2 பேரை விடுதலை செய்தது. ஜான்பாண்டியன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 7 பேரும் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இதை விசாரித்த உயர் நீதிமன்றம் 7 பேர் தண்டனையை உறுதி செய்தது.
dinakaran.com