சகோதரர் இக்பால் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது

13/08/2010 14:51

புதுவலசை மேற்குத் தெருவைச் சேர்ந்த சகோதரர் இக்பால் அவர்கள் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததும் அவருக்காக பல்வேறு தரப்பு மக்களும் உதவி செய்ததும் தாங்கள் அறிந்ததே.

கடந்த 2 மாதங்களாக தனது அறுவைசிகிச்சைக்கு முந்திய பரிசோதனைக்காக சென்னையில் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் கடந்த 11ம் தேதி காலை 8 மணிக்கு அறுவைசிகிச்சை அறைக்கு கொண்டு செல்லப்பட்டு சுமார் 5 மணிநேரம் நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது.

சென்னை குலோபல் மருத்துவமனையில் 2 பெண் மருத்துவர்களைக் கொண்டு இந்த அறுவைசிகிச்சை நடைபெற்றுள்ளது. மாலை 4 மணியளவில் பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. நேற்று தம் குடும்பத்தாருடன் பேசியிருக்கிறார் அல்ஹம்துலில்லாஹ்....

தொடர்ந்து 4 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு பின் வேறு அறைக்கு மாற்றப்பட உள்ளார். இந்த செய்தியை படிக்கும் இதயங்கள் தங்களது ரமாளான் மாத பிரார்த்தனையில் இச் சகோதரரின் உடல் நலத்திற்க்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய கேட்டுக் கொள்கிறோம்.