சகோ. முஹைதீன் அப்துல் காதருக்காக இதுவரை பெறப்பட்டுள்ள உதவிகள் விபரம்

21/07/2011 08:47

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரர் முஹைதீன் அப்துல் காதர் அவர்களுக்கு உதவிகள் வேண்டி நம் மக்களுக்கு செய்திகள் தெறிவிக்கப்பட்டு அதை தொடர்ந்து பெற்றுத் தரும் முயற்சியில் பல சகோதரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது மருத்துவ செலவீனங்களுக்காக இதுவரை உறவினர்கள் மற்றும் நமதூர் சகோதரர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். இதுவரை மொத்தமாக 44 ஆயிரம் மட்டுமே உதவியாக பெறப்பட்டுள்ளது.

 

எனவே அன்பார்ந்த சகோதரர்கள் சற்று அதிக முயற்சி செய்து இந்த அறுவைசிகிச்சைக்கான பொருளாதார உதவிகளை பெற்றுத்தருமாறு பாதிக்கப்பட்டவர் சார்பாக தங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

 

இந்நிலையில் விரைவில் சென்னை செல்ல இருப்பதாகவும் அவரது சகோதரர் ஜவஹர் அலி அவர்கள் தெறிவித்துள்ளார்கள்.

 

ஒரு உயிரின் மதிப்பு நமது 1 மாத சம்பளத்தைவிட பண்மடங்கு உயர்ந்தது என்பதை கருத்தில் கொள்ளுங்கள். வரக்கூடிய காலம் ரமளானுடைய நாட்களாக இருப்பதால் அதிகம் அதிகம் தர்மம் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் உங்களது ஜகாத்துக்களையும் இவருக்காக வழங்கலாம் என்பதையும் தெறிவித்துக் கொள்கிறோம்.

முயற்சி மட்டுமே நம்முயைடது வெற்றி அல்லாஹ்வுடைய புறத்தில் இருந்து வருவது எனவே இவருக்காக உங்கள் தொழுகைகளில் பிரார்த்தனை செய்ய மறக்காதீர்கள்.

அப்துல் ஹலீம்

புதுவலசை.இன்