சகோ. தமீம் தீன் அவர்களின் அவசர இதய மருத்துவ உதவி வேண்டி

16/10/2012 10:17

 

அல்லாஹ்வின் திருப்பெயரால்………

16-10-2012

அவசர இதய மருத்துவ உதவி வேண்டி

 

அன்புள்ள சகோதர, சகோதரிகளுக்கு...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 

இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையைச் சேர்ந்த முன்னால் போலீஸ் காரர் சகோ. சேக்தவூது அவர்களின் மகன் சகோ. தமீம் தீன்  (வயது 39) அவர்களுக்கு சில மாதத்திற்குள் தொடர்ந்து இருமுறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனையில் சிகிச்சைக்காக மதுரை வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் இல்லையேல் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனவும் தெறிவித்துள்ளனர். 

 

புதுவலசை மக்கள் அனைவருக்கும் அவரது குடும்பச் சூழலும் அவரது பொருளாதரார நிலையும் அறிந்ததே இதுவரை சுமார் ஒரு இலட்சம் வரை செலவு செய்துள்ளார்கள். பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 4 இலட்சங்கள் வரை செலவாகும் என தெறிகிறது. எனவே உங்களால் இயன்ற உதவியை தாராளமாக தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்யும் சகோதரர்களிடமும் முடிந்தவரை பெற்று உதவுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

 

இத்துடன் நமதூர் முஸ்லிம் ஜமாஅத் தர்மபரிபாலன சபையின் பரிந்துரைக் கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

 

உதவிகள் தொடர்புக்கு

 

சகோதரர்  சஹாபுதீன் - அபுதாபி - 05612808448

சகோதரர் ஹம்சத் அலி - துபாய் - 0558906550

சகோதரர் நியாஸ் அஹமது குவைத் 0096555737603

சகோதரர் மீரான் மைதீன் - மலேசியா 0060123109895

சகோதரர் இம்தியாஸ் - புதுவலசை 00919786759233

சகோதரர் முஹமது பசுலுதீன் - சவுதி அரேபியா 00966502823740

 

உடனடித் தேவை என்பதால் காலதாமதப்படுத்தாமல் வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் உங்களது உதவிகளை (தனியாகவோ இயக்கமாகவோ) தந்து உதவுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

 

PDF பைலாக பதிவிரக்கம் செய்ய

 

1. தமிழில் 

2. ஆங்கிலத்தில்

 

உதவிகளை அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு எண்

SASMIYA BEGAM

ICICI BANK, PANAIKULAM BR

A/C NO: 617001500436

இப்படிக்கு

அப்துல் ஹலீம் துபாய் 0508845461