சதாம் உசேன் கூட்டாளி தாரிக் அஜீஸுக்கு மரணதண்டனை

26/10/2010 17:05

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் கூட்டாளியும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவருமான தாரிக் அஜீஸ்க்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி காலத்தில், அயலுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் தாரிக் அஜீஸ்.

அமெரிக்க படையெடுப்பைத் தொடர்ந்து சதாம் உசேன், ஆட்சியில் இருந்து இறக்கப்பட்ட பிறகு, அவர் மீதும், அவருடைய கூட்டாளிகள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.

அவற்றில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தாரிக் அஜீசுக்கு ஈராக் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

 

வெப்துனியா