சமச்சீர் கல்வி : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

26/05/2011 17:32

 

இந்தியாவின் கிராமம் ஒன்றில் பள்ளி மாணவர்கள்

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை எதிர்த்து பொது நல வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்த முந்தைய அரசு ரூ.200 கோடி ரூபாய் செலவழித்தது. இதனை வீணடிக்கும் வகையில் தற்போதைய அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது என்றார். மாணவர்கள் எதிர்காலம் பாழாகும் வகையில் இந்த அரசு ஆணை அமைந்துள்ளது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சமச்சீர் கல்வி விவகாரத்தில் தமிழக அரசு ஜூன் 8ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.