சமூக அவலங்கள் - வெளிப்பட்டினத்தை சேர்ந்த பெண் தற்கொலை

06/10/2010 16:50

ராமநாதபுரம் அருகே உள்ள வெளிபட்டணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அயூப்கான், கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரம்ஜான் (வயது30). இந்த தம்பதிக்கு 2 குழந் தைகள் உள்ளனர்.
 
குடிப்பழக்கத்திற்கு அடிமையான அயூப்கான் தினந்தோறும் தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். அத்துடன் குடும்ப செலவிற்கும் பணம் தராமல் இருந்துள்ளார்.
 
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரம்ஜான் தனது கணவரை பிரிந்தார். கூலி வேலை செய்து தனது குழந்தைகளை வளர்த்து வந்தார்.
 
இதற்கிடையே ரம்ஜானுக்கும், அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்த்து வரும் அஜீஸ் கான் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இதில் அஜீஸ்கானுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
 
2-வது கணவருடனும் ரம்ஜானுக்கு வாழ பிடிக்காமல் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் வாழ்க்கையை வெறுத்த ரம்ஜான் நேற்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாலைமலர்