சர்தாரியை கொல்ல ராணுவ தளபதி சதி: விக்கிலீக்ஸ் தகவல்

02/12/2010 20:09

 

இஸ்லாமாபாத், டிச.2 (டிஎன்எஸ்) அமெரிக்க தூதரகங்கள் தொடர்பான 2 1/2 லட்சம் ரகசியங்களை அமெரிக்க இணையதளமான விக்கி லீக்ஸ் வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகங்களும் அமெரிக்காவுக்கு அனுப்பும் ரகசியங்களை இந்த நிறுவனம் சேகரித்து வெளியிட்டுள்ளது.
 
அதில் பாகிஸ்தான் தொடர்பான ஏராளமான ரகசியங்களும் உள்ளன. பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை ராணுவ புரட்சி மூலம் கொன்று விட்டு வேறு ஒருவரை அதிபராக்க ராணுவ தளபதி கியானி சதி திட்டம் தீட்டி இருப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
 
அமெரிக்க தூதர் அன்னி பீட்டர்சனிடம் ராணுவ தளபதி கியானி, சர்தாரி அதிபராக இருப்பது பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார். சர்தாரியோ அல்லது நவாஸ் ஷெரீப்போ அதிபராக இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அலாமி லீக் கட்சி தலைவர் வாலிகான் அதிபர் ஆவதை விரும்புகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.

கியானி தன்னை கொல்ல வாய்ப்பு இருக்கிறது என சர்தாரியும் கருதி இருக்கிறார். எனவேதான் கொல்லப்பட்டால் அதற்கு பதிலாக தனது சகோதரி பர்யால் தல்புர் அதிபராக வேண்டும் என்று கருதி இருக்கிறார். இதுபற்றி சர்தாரி தனது மகன் பில்வாலிடம் விவாதித்துள்ளார். பர்யால் தல்புரை அதிபராக் கும்படி பில்வாலிடம் அவர் கூறியுள்ளார். (டிஎன்எஸ்) chennaionline.com