சர்வதேச குரான் எரிப்பு தினத்திற்கு எதிராக ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போராட்டம்

09/09/2010 09:25

பஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்ற அமெரிக்கரால் ஏற்படுத்தப்பட்டுள்ள குரான் எரிப்பு தினம் எனும் இயக்கம் பற்றி முன்பே நமது புதுவலசை இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்த நிகழ்வுக்கு அந்த நிகழ்வுக்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 7 ஆம்தேதி ஜோன்சின் கொடும்பாவி உருவபொம்மை  எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது. படங்கள் யாஹூ.

ஜெர்மனியை சேர்ந்த சர்ச் ஒன்று நேற்று ஜோன்சின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. கிறிஸ்டியன் கம்யுனிட்டி ஒப் கலோங்க்னே என்ற அமைப்பை சேர்ந்த ஸ்டீபன் பார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ஜோன்சின் இந்த வெறித்தனமான நடவடிக்கையை கண்டு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்ததாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தேவாலயம் அறிவித்துள்ள குரான் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாடிகன், இது இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துகிற செயல் என்று கூறியுள்ளது. 

 செப்டம்பர் 11 ஆம் தேதி நெருங்கி வருவதால், குரான் எரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க அரசு தரப்பிலிருந்து அத்தேவாலயத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் புளோரிடா மாகாண அரசின் அமைச்சராகவும் இருக்கும் பாஸ்டர் ஜோன்ஸ், திட்டமிட்டபடி குரான் எரிப்பு போராட்டம் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடந்த மாதம் பாலியல் குற்றச்சாட்டில் ஜோன்ஸ் கைது செய்யப்பட்டதும், கடந்த 2008 ஆம் ஆண்டு 60 உறுப்பினர்களால் ஜோன்ஸ் சர்ச்சில் இருந்து தூக்கி எறியப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.