சவூதி: எட்டு வங்க தேச கொள்ளையர்களுக்கு மரண தண்டனை!

09/10/2011 23:42

 

கொலை, கொள்ளை குற்றத்தில் ஈடுபட்ட எட்டு வங்கதேசப் பணியாளர்களுக்குக் கடந்த வெள்ளியன்று (07 OCT 2011) சவூதி தலைநகர் ரியாத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

இக்குற்றத்தில் உடந்தையாக இருந்தமைக்காக மற்ற மூன்று சக வங்கதேசத்தவருக்குச் சவுக்கடிகளும் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தகவலை சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தலைநகர் ரியாத்திலுள்ள அல்ஹகம் அரண்மனை அருகிலுள்ள நீதிவளாகத்தில் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதைச் சவூதிகளும், வெளிநாட்டவரும் திரளாகக் கண்டனர்.

சரக்ககம் ஒன்றைக் கொள்ளையடித்ததுடன், அங்குக் காவல் இருந்த எகிப்திய அதிகாரி ஒருவரைக் கொன்றதுமான குற்றத்தை இவர்கள் புரிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

inneram