சாலைவிபத்தில் வாலாந்தரவை ஜமாஅத் தலைவர் பலி

06/10/2010 16:22

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது ​(78).​ அவ்வூரின் பள்ளிவாசல் ஜமாத் தலைவர்.​ இவர் மதுரையிலிருந்து வாலாந்தரவைக்கு காரில் வந்துகொண்டிருந்தார்.​ காரை அதே ஊரைச் சேர்ந்த அப்துல் மாலிக் மகன் முகம்மது கனி ​(23) ஓட்டி வந்தார்.

நென்மேனி பகுதியில் கார் வந்தபோது,​​ பொட்டிதட்டியிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி ​ மோதியது.​ இதில் செய்யது முகம்மது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.​ கார் டிரைவர் பலத்த காயமுற்று,​​ பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி