சித்தார்கோட்டையில் தையல் பயிற்சி வகுப்பு

30/10/2010 21:19

ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தையல் மற்றும் எம்பிராய்டரிங் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.

 

 இந்த விழாவுக்கு சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முகம்மது அப்துல்கனி தலைமை வகித்தார்.

 

டி.ஆர்.ஆர்.எம். தொண்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் கருப்புச்சாமி முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ரத்தினசாமி பயிற்சியைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

 

  சித்தார்கோட்டை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிர்வாகிகள், பயிற்சியாளர் முரளீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டி.ஆர்.ஆர்.எம் நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.சங்கர் நன்றி கூறினார்.

 

  ராமநாதபுரம் டி.ஆர்.ஆர்.எம். தொண்டு நிறுவனமும், மாவட்ட மகளிர் திட்டமும் இணைந்து இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

 

 

தினமணி.காம்