சிறுவர் சிறுமியரிடம் தகாத உறவு - சாமியார் கைது

23/11/2010 14:38

புனேவில் மோஷி என்னும் இடத்தில் ஆசிரமம் நடத்தி வந்தவர் லம்ஹெடே மகராஜ். லம்ஹெடே மகராஜ் இசைக் கருவிகளை கொண்டு பஜனை பாடல்கள் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

ஆன்மீக உபதேசமும் செய்து வந்த மகராஜ் கடந்த சில மாதங்களாக தன் ஆசிரமத்தில் உள்ள 7 முதல் 16 வரையுள்ள சிறு குழந்தைகளிடம் முறையற்ற செக்ஸ் உறவு வைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து செக்ஸ் மகராஜ்  கைது செய்யப் பட்டுள்ளார்.

கைது செய்யப் பட்ட மகராஜை  நாளை வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

inneram.com