சிறுவர் சிறுமியரை பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் உண்மையே - பெல்ஜியம் பேராயர்

20/09/2010 14:45

பெல்ஜியம் பேராயர்பெல்ஜியம் பேராயர் ஆந்த்ரே ஜோஸஃப் லியொனார் பெல்ஜியத்தின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் பாதிரிமார்கள் சிலரால் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டது பரவலாக நடந்துள்ளது என்பதை அத்திருச்சபையின் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்கும் பொலிசாரிடம் தாங்கள் நெருங்கி ஒத்துழைக்க விரும்புவதாக பேராயர் ஆந்த்ரே ஜொஸெஃப் லியொனார்ட் கூறினார்.

துஷ்பிரயோகத்துக்கு ஆளானவர்களுடன் சமரசத்துக்கு வருவதற்கான புதிய மையம் ஒன்றை திருச்சபை அமைக்கப்போகிறது என்று பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் ஒவ்வொரும் அனுபவித்திருந்த துன்பங்களை அவரவர் நிலையில் புரிந்துகொள்வது முக்கியம் என்று அவர் கூறினார். தவறுகளில் இருந்து திருச்சபை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

பெல்ஜியத்தில் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் மற்றும் திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் பள்ளிகளின் ஆசிரியர்கள் சிறார்களைப் பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளதாக பக்கச்சார்பற்ற விசாரணை ஆணையம் சென்ற வாரம் தகவல் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பெல்ஜியத்தின் அனைத்து மாறைமாவட்டங்களிலுமே தசாப்தங்கள் கணக்கில் இப்படியான துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளன.

பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்களில் ஒரு சிலர் பச்சிளம் குழந்தைகளாக இருந்தபோதே இந்தக் கொடுமைகள் அவர்களுக்கு ஆரம்பித்திருந்தனவென்று அது கூறியிருந்தது.

தாங்கள் அனுபவித்த துன்பங்களின் விளைவாக இச்சிறார்கள் 13 பேர் தற்கொலை செய்துகொண்டதாகவும் விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது.

பிபிசி தமிழ்