சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் பணிக்கு ஆள்கள் தேர்வு வரும் 25ம் தேதி கடைசி நாள்

22/08/2010 00:20

ராமநாதபுரம்,ஆக. 20:  சி.ஆர்.பி.எப்.கான்ஸ்டபிள் (ஜி.டி.) பதவிக்கு தகுதியுடையோர்  விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  சி.ஆர்.பி.எப். கான்ஸ்டபிள் (ஜி.டி) பதவிக்கு தமிழ்நாடு,பாண்டிச்சேரி,அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற இடங்களைச் சேர்ந்த தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

இதில் ஆண்களுக்கு 581 பணியிடங்களும், பெண்களுக்கு 8 பணியிடங்களும் நிரப்பப்

 

படவுள்ளன.  மெட்ரிக் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது 18 முதல் 23 வயது (1.8.1010-க்குள்) இருப்பவராக இருக்க வேண்டும்.  ஊதிய விகிதம் 5200 - 20200  கிரேடு பே-2000.

 

இப்பணிக்கு பூர்த்திசெய்த விண்ணப்பங்கள் இம்மாதம் 25 ஆம் தேதிக்குள் 

The DIGP,

Group Centre,

CRPF,

Avadi,

Chennai,

Tamilnadu – 600 065.

 gcavd@crpf.gov.in  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.crpfrecruitment.org/