சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை கார்விபத்தில் மரணம்

23/05/2011 16:36

தமிழக சட்டசபைக்கு முதன் முதலில் மக்களால் தேர்வு செய்யப்பட்டார் மரியம் பிச்சை இவருக்கு தமிழக சுற்றுச் சூழல்துறை அமைச்சராக அதிமுக பொறுப்பு வழங்கியது. இந்நிலையில் இன்று காலை திருச்சி அருகே நடந்த கார்விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார்.

 

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நேரில் அஞ்சலி செழுத்த திருச்சி விரைந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெறிவித்துள்ளனர். திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அமைச்சர் மரியம் பிச்சையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சி பி ஐ விசாரனைக்கு உத்தரவிட்டார் ஜெ.