சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரணி

26/07/2012 11:15

 

கீழக்கரை, கிழக்குத்தெரு கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுகாதார சீர்கேட்டை அகற்றவும் வலியுறுத்தி பேரணி மற்றும் தெருமுனைப் பிரசாரம் நடைபெற்றது.
 
இப்பேரணிக்கு பள்ளியின் தாளாளர் சாதிக் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் முகம்மது மீரா முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றதோடு முக்கிய இடங்களில் தெருமுனை பிரசாரம் செய்தனர்.
 
செல்லும் வழியிலுள்ள வீடுகளில் சுகாதாரம் குறித்த விழிப்புணவுக் கருத்துகளை விளக்கி கூறினர். இதில் பள்ளி ஆசிரியர்கள் பத்மாவதி, சாபிரா பேகம், ரேணுகா தேவி, பரமேஸ்வரி, ஆர்த்தி மற்றும் அலுவலர் செய்யது அபுதாகிர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
dinamani.com