சுவிட்சர்லாந்திலும் முஸ்லீம் பெண்களின் முகத்திரைக்கு தடை?

22/05/2011 17:56

 

சுவிட்சர்லாந்தின் ரிக்கினோ கான்டனில் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் பெண்களின் கலாச்சார உடையான புர்காக்களை அணிவதற்கு தடை விதகிகப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

புர்கா அணிவதனை அனுப்பதிப்பதா அல்லது தடை செய்வதா என்பது தொடர்பில் ரிக்கினோ கான்டனில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

புர்கா அணிவதனை தடை செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனக் கோரி பத்தாயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இந்த கையொப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு

நியூஸ்ஓநியூஸ்