சூதாட்டக் களமாக மாறிவரும் உமர் ஊரணி தைக்கா

23/07/2011 14:51

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நமதூர் உமர் ஊரணி தைக்கா பல வருடங்களாக சூதாட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. என்றாவது ஒருநாள் இவை மாற்றப்பட்டு விடாதா என ஏங்காத நல்உள்ளம் கொண்ட சகோதரர்கள் ஏராளம். இந்த அவளம் கடந்த பல வருடங்களாக சிரிய விளையாட்டாக ஆரம்பித்து பின் பெரும் சூதாட்டமாக மாறி விட்டது. சில மாதங்களுக்கு முன் ஒரு நடுத்தர வயதுடையவருக்கும் ஒரு டீன் ஏன் பையனுக்கும சூதாட்டத்தில் தகராறு ஏற்பட்டு சண்டையாகவே மாறியது.

 

சில வருடங்களுக்கு மன் உமர் ஊரணி ஊரின் ஒருக்குப்புறமாக இருந்தது. ஆனால் அதன் நாளாபுறங்களிலும் இன்று வீடுகள் வந்துவிட்டதால் பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் என மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனாலும் சூதாட்ட கும்பலின் எண்ணிக்கை குறைந்தபாடு இல்லை. அதுமட்டுமின்றி இப்போது வெளியூரில் இருந்தும் சூதாட்டக்காரர்கள் இங்கே வருவாதக தகவல் வருகிறது. இது பற்றி தகவல் தெறிந்தும் தெறிவித்தும் ஜமாஅத்தி்ல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெறியவில்லை. அந்த வழியாக செல்லும் பெண்கள் முகம் சுழிக்கும் வகையில் இவர்களின் பேச்சு நடவடிக்கைகள் இருப்பதால் இதை இப்படியே விட்டுவிடாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் புதுவலைசை.இன் இணையதளம் சார்பாக சம்மந்தப்பட்ட ஜமாஅத் நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.