செய்தித் துளிகள் செப் 2010

30/09/2010 15:34

 

 •  காஸா மீது இஸ்ரேல் விதித்திருக்கும் கடல்வழித் தடை உத்தரவை மீறி காஸாவில் நுழைய முயன்ற 'ஐரீன்' என்ற கப்பலை இஸ்ரேல் படையினர் கைப்பற்றித் தடுத்தனர்.
 • சோராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவின் (46) நீதிமன்றக் காவல் அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 • செப்.30: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் அயோத்தி விவகாரம் தொடர்பாக கோபத்தைத் தூண்டும்வகையில் நண்பர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பிய ஒச்சிராவைச் சேர்ந்த ஜெயக்குமார், சுபாஷ், மனு மற்றும் ஜிஜோ ஆகிய 4 பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.அயோத்தி தீர்ப்பு, நாளை வெளியாக இருப்பதையொட்டி, பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டில் நாளை ஒன்றரை லட்சம் லாரிகள் இயக்கப்படாது என்று அறிக்கப்பட்டுள்ளது.
 • அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி, தமிழகத்தில் ஒழுங்கு நடமுறைச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, ஏடிஜிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 • இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் கடந்த பலநாட்களாக தன்பக்கம் ஈர்த்துள்ள பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, நாளை (30ம் தேதி) மாலை அறிவிக்கப்படுவதாக உள்ளதுhttps://www.allahabadhighcourt.in/indexhigh.html என்ற இணையதளத்தில் கோர்ட்டின் தீர்ப்பு வெளியாகிறது.
 • ஒற்றுமைதான் நமது சமூகத்தின் பலம். எனவே அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என, சோனியா காந்தி & பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளனர்.
 • இந்திய மாலுமிகள் 15 பேருடன் பயணித்த பனாமா நாட்டுக் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் இன்று கடத்திச் சென்றனர்.
 • இந்தியாவில் கட்டுப்பாட்டு கணினிகள் 2 மாதத்தில் அமைக்கப்படும் என்று பிளாக்பெர்ரி உறுதிமொழி கூறியது.  2 மாதத்தில் பணிகளை முடிக்காவிட்டால் பிளாக்பெர்ரிக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 • ’’நானும் என்னைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நாளை இணைகிறோம்”. தலைவர் திருமாவளவனை சமீபத்தில் சந்தித்த போது அவரது அன்பும் அரவணைப்பும் சகோதரத்துவ ரீதியில் இருந்தது. அவரால் ஈர்க்கப்பட்டேன் -  சினிமா தயாரிப்பாளர் காஜாமைதீன்.
 • அரசு மருத்துவர் ஒருவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மதுரை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பெருமாள்பாண்டியை, லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  
 • செப்.28: அயோத்தி ராமஜன்மபூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்க உள்ள தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

 

 

 • அயோத்தி வழக்கில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண மேலும் ஒரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கூறி தொடரப்பட்ட மேல் முறையீட்டின் மீது இன்று மதியம் 2 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
 • காமன்வெல்த் போட்டியை யார் துவக்கி வைப்பது என்ற சர்ச்சை நிலவி வந்த நிலையில் இளவரசர் சார்லஸ் குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் இருவரும் துவங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 • ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பெண் விஞ்ஞானிக்கு, அமெரிக்க நீதிமன்றம் 86 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
 • ஜி-20, ஷாங்காய் ஒத்துழைப்பு, பிரிக் ஆகிய அமைப்புகளின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ரஷ்யாவும், சீனாவும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. பெய்ஜிங்கில் நேற்று ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவும், சீன அதிபர் ஹூ ஜிந்தாவோவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
 • ஒகேனக்கல் பகுதியில் 80 சதவீத நிலம் கர்நாடக மாநிலத்துக்கு சொந்தமானதால், அங்கு புதிய அணை கட்டப்படும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்தார்.
 • மதுரையிலிருந்து டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 • புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அக்டோபர் 21-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 • இந்த நிதியாண்டில் 6 புதிய ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் இ.அகமது கூறியுள்ளார்.
 • டில்லியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை துரத்திச் சென்று பிடிக்க முயற்சித்த ரிக்ஷாக்காரர் சலீம் அகமதுக்கு, பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி சார்பில் நேற்று டில்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சலீம் அகமதுக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 
 • காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 100 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளிகளுக்கு அழைத்து வர 11 வழித்தடங்களில் 170-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டதாக காஷ்மீர் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
 • தில்லி மெட்ரோ ரயில்களில் அக்டோபர் 2-ம் தேதி முதல் பெண்களுக்கு தனி பெட்டி ஒதுக்கப்படுகிறது - தில்லி மெட்ரோ ரயில் கழகம்

   

 •  

 •  

   

   

 • அயோத்தி தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை - அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி ரமேஷ் சந்திர திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது 23-9-2010 பிற்பகல் 2 மணியளவில் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் பெஞ்ச், எப்போது தீர்ப்பு வழங்குவது என்பது குறித்து செப்டம்பர் 28-ம் தேதி முடிவு செய்யப்படும் என அறிவித்தது. 
 • ஒரு வாரத்தில் மகாராஷ்டிராவில் 42 பேரும், குஜராத்தில் 29 பேரும், மத்திய பிரதேசத்தில் 14 பேரும், டெல்லியில் 10 பேரும், உத்தர பிரதேசத்தில் 3 பேரும், ஹரியானா, ஆந்திரா, கேரளா, உத்தரகண்ட், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா 2 பேரும் பன்றிக் காய்ச்சலுக்கு 110 பேர் பலியாகியுள்ளனர். இதுவரையில் பன்றிக் காய்ச்சலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,427.  
 • அபிராமத்தில் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தேசிய பசுமைப் படை ​ அமைப்பு மாணவ,​​ மாணவியர் ஓசோன் பாதுகாப்பு அவசியம் பற்றிய விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.​
 • கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் அக்கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.அபுல்ஹசன் சதாலி தலைமையில் நடைபெற்றது.
 • ஜனாதிபதி, பிரதமர் பயன்படுத்தும் போயிஸ் 747-400 ரக  விமானத்துக்கு ரூ.800 கோடி கட்டணம் தர வேண்டும் என்று ஏர்-இந்தியா நிறுவனம் முதன் முறையாக கோரிக்கை விடுத்துள்ளது.
 • ஆளில்லாமல் 5 ஆண்டுகள் பறக்கும், சூரிய சக்தி மூலம் இயங்க கூடிய “போயிங்” ரக விமானத்தை ரூ.440 கோடி செலவில்   உளவு விமானம் அமெரிக்கா தயாரிக்கிறது.  இதற்கு “சோலார் ஈகிள்” (சூரிய கழுகு) என பெயரிடப்பட்டுள்ளது.
 •  பீகார் தேர்தலையொட்டி போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மதுபானி நார்கட்டியா கிராமத்தில் புல்லாதேவி (வயது 60) என்ற பெண்ணின் மகனை போலீசார் கைது செய்து இருந்தனர். போலீஸ் நிலையம் சென்று மகனை பற்றி விசாரித்த புல்லாதேவியை போலீஸ் அதிகாரி லட்சுமண்பிரசாத் அடித்து உதைத்தார். இதில் அவர் இறந்தார்.
 • காஷ்மீரில் போலீஸ் மீது கல்வீசிய 300 பேர் விடுதலை, 60 பேர் மீது ஜாமீனில் வர முடியாத பிரிவு படி 1 ஆண்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். உமல்அப்துல்லா நடவடிக்கை
 • உ.பி., மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ., - பகுஜன் சமாஜ் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  4,812 பேருக்கு கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பபட்டுள்ளது.  தீர்ப்புக்கு பிறகு எவ்வித நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதற்காக இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
 • டெல்லி ஜும்மா மஸ்ஜித் துப்பாக்கி சூடு, ஈமெயில் மூலம் மிரட்டல் அனுப்பிய விவகாரத்தில் முப்மையில் சந்தேகத்தின் பெயரில் இருவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. போலி செல் நம்பர் மூலம் மிரட்டல் ஈமெயில் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்.  
 • பிரிட்டனில் முறையான ஆவணம் இல்லாமல் குடியேற்ற சட்டத்தினை மீறி சட்டவிரோதமாக பணியாற்றிய 19 இந்தியர்கள் கைது, 160,000 பவுண்ட்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
 • ரூ.15 கோடி செலவில் 10 லட்சம் பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 • உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 177 கிராமங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.  இதுவரை வெள்ளத்தில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
 • தமிழக அரசின் விவசாயிகளுக்கான இலவசமின்சார மோட்டார் வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
 • தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 8ஆம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 • நாடு முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 27 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
 • திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை விநாயகர் கோவிலில் இருந்து, பட்டினப்பாக்கம் வரை விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால்,  அனுமதிக்கப்பட்ட சாலை வழியாக செல்லாமல், திருவல்லிக்கேணி பெரிய தெரு (பெரிய மசூதி) வழியாக நேற்று (19-9-20010) மாலை ஊர்வலம் செல்ல இந்து முன்னணியினர் முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட 63 பேரை கைது செய்தனர்.
 • சூரிய சக்தியால் இயங்கும் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை வாங்குகிறது அமெரிக்க ராணுவம். அமெரிக்காவுக்காக இதை தயாரித்துத் தருகிறது போயிங் நிறுவனம்.
 • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கை, கால் இழந்தவரான பிலிப் குரோய்சன் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை படைத்துள்ளார். பிலிப் குரோய்சனுக்கு தற்போது வயது 42.
 • அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க ரமேஷ் திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவை ஏற்க கோர்ட் மறுத்து அபராதமும் விதித்து. இந்நிலையில் அயோத்தி தீர்ப்பை ஒத்திவைக்க திரிபாதி இன்று சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனுவாக தடை கோரி அப்பீல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் மதியம் 2 மணிக்கு விசாரிக்கிறது.
 • ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு ரூ. 7.39 கோடி செலவில் வயர்லெஸ் கருவி வழங்கப்பட உள்ளதாக மீன் துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
  • இங்கிலாந்தில் சிறுவர், சிறுமிகளிடம் அங்குள்ள பாதிரியார்கள் “செக்ஸ்” குற்றம் இழைத்ததாக குற்றச்சாட்டு, எனவே, போப் ஆண்டவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்டவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை நடத்தினர். இதற்க்கு போப் மன்னிப்பு கேட்டுள்ளார்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை வகித்த கடைசி 16 பேரில் 8 பேர் ஊழல் கறை படிந்தவர்கள் ஆவர். 6 பேர் மிகவும் நேர்மையானவர்கள். 2 பேர் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் முன்னாள் சட்ட அமைச்சரும், சட்ட நிபுணருமான சாந்திபூஷன்.
  • சார்க் அமைப்பு உருவாக்கப்பட்டு 25 வருடங்களாகியும் இதுவரை அதன் முழுமையான நோக்கம் நிறைவேறவில்லை - எஸ்.எம்.கிருஷ்ணா.
  • அமெரிக்காவின் நாடாளுமன்ற அறிக்கை ஒன்று தெரிவித்திருப்பதன் படி 2006-09 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
  • ஐ நா சபையின் பெண்களுக்கான புதிய அமைப்பில் சிலி நட்டு முன்னால் அதிபரான மிச்சிலி பாச்லத் என்ற பெண் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்
  • தென்மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள மனிதஉரிமை தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக முதன்முறையாக பெங்களுரூவில் மனிதஉரிமை ஆணைய கோர்ட்  தொடங்கப்பட்டுள்ளது.
  • காஷ்மீர் இளைஞர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இளைஞர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - சோனியா
  • தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது.
  • திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான சாலையில் கம்பிவேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
  • சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்க பிரிண்டர் வசதியுடன் கூடிய 62 புதிய கருவிகள் வாங்கப்பட்டுள்ளது - மாநகர போலீஸ் கமிஷனர் டி. ராஜேந்திரன்
  • அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நவம்பர் மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளார். இதையொட்டி தகவல் தொழில்நுட்பப் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழு விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளது.
  • அயோத்தி ஹிந்துக்களின் மதம் மற்றும் நம்பிக்கை தொடர்பான பிரச்னை. அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டுவதற்கு இஸ்லாமியர்கள் தடையாக இல்லாமல் மத மாச்சரியங்களை மறந்து உதவ முன்வர வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
  • இங்கிலாந்தில் கலாசாரம் சீரழிந்து வருகிறது, இதை தடுக்க அங்கு பள்ளிகளில் “செக்ஸ்” கல்வி புகுத்தப்பட்டுள்ளது. இருந்தும், சிறுமிகள் கர்ப்பம் அடைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. எந்தவித தடையும் இன்றி  13 வயது சிறுமி கூட கருக்கலைப்பு மாத்திரை களை பெற சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  இத்திட்டம்  நவம்பர் முதல் அமலுக்கு வருகிறது.  
  • அரேபியாவில் இருந்து பிலிப்பைன்ஸ் சென்றபோது விமானத்துக்குள் ரகசியமாக ஆண் குழந்தை பெற்ற பெண்; குப்பை தொட்டிக்குள் வீசிவிட்டு ஓட்டம்
  • விவசாய பம்ப் செட்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதையடுத்து, விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • 14 பேரின் கருணை மனுக்களை ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
  • ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள பிரிட்டன் ராணுவத்தினர் போதை மருந்து கடத்தியதாக புகார் எழுந்துளளதால் ராணுவ விசாரணக்கு பிரிட்டன் உத்தவிட்டுள்ளது. ராமர்ஜென்மபூமி-பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அதை பாஜக ஏற்கும். நீதிமன்றத்தின்உத்தரவை மதிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.
  • ராமர்ஜென்மபூமி-பாபர் மசூதி இருக்கும் இடம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அதை பாஜக ஏற்கும். நீதிமன்றத்தின்உத்தரவை மதிக்கும் என்று பாஜக கூறியுள்ளது.
  • பாபர் மசூதி இடிப்பு - உ.பி. அரசையும், பாஜகவையும் நம்பியதன் மூலம், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு தப்புக் கணக்குப் போட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
  • அயோத்தியில் பாபர் மசூதியை பாஜகவினரும், சங் பரிவார் அமைப்பினரும் இடிக்கப் போவது குறித்த உளவுத் தகவல் ஏற்கனவே உ.பி. போலீஸாருக்குத் தெரியும் என்று ரேபரேலி கோர்ட்டில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா (அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர்) கூறியுள்ளார்.
  • அமெரிக்கா பாஸ்டர் ஜோன்ஸுக்கு எழுந்த எதிர்ப்பின் எதிரொலி குர்ஆன் எரிப்பு தினம் கைவிடப்பட்டது. ஒபாமாவின் வேண்டுகோளுக்கும் உலகம் முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பின் விளைவின் வெற்றி.
  • அமெரிக்க தேவாலயம் அறிவித்துள்ள குரான் எரிப்பு போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வாடிகன், இது இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துகிற செயல் என்று கூறியுள்ளது. 
  • நடப்பு ஆண்டில் இதுவரை 224 கொலை சம்பவங்கள். இவற்றில், பெரும்பாலான  கொலை சொத்து தகராறு, காதல், கள்ளக்காதல் உள்ளிட்ட பாலியல் தொடர்பாகவும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடனும், வாய்த்தகராறு காரணமாகவும் நிகழ்ந்துள்ளன.
  • ஈத் பண்டிகையை முன்னிட்டு காஷ்மீர் முழுதும் இன்று ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • கரூர் மாவட்டத்தில் நான்கு சர்ச்சுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்து முன்னணியினரே இதற்குக் காரணம் என புகார் கூறப்பட்டுள்ளது.
  • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ அதிகாரிகள் மீது 1,535 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 35 வழக்குகளில் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தீர்ப்பு வெளியானது - லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ். ஜஸ்வால்
  • தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா அவரது 4-வது மனைவி போன்ஜிவி குளோரியா நகேமா மூலம் விரைவில் 22-வது குழந்தைக்கு தந்தையாக உள்ளார்.  21-வது ஆண் குழந்தை 2-வது மனைவிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிறந்தது. அதிபரின் 4 மனைவிகள், பிள்ளைகளைப் பராமரிக்க ஆண்டுக்கு 6.5 கோடி வரை செலவாகிறது.
  • பாகிஸ்தான் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல் கட்டமாக 20 மில்லியன் டாலருக்கான காசோலையை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் இந்தியா அளித்துள்ளது.
  • பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாஜக அழைக்கக் கூடாது என்று அம் மாநில முதல்வர் நிதிஷ் குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீரில் ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை எந்தவித தயக்கமும் இன்றி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் - தொல். திருமாவளவன்
  • தமிழகத்தில் காலியாக உள்ள 2 லட்சம் அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - மாநில அரசுப் பணியாளர் சங்கத் தலைவர் பிச்சையா
  • அயோத்தியில் இன்று (SEP 18) பாதுகாப்புப் படையினரின் கொடிஅணிவகுப்பு நடத்தப்பட்டது. அதேபோல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
  • அயோத்தி நில விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இறுதிக் கட்ட முயற்சியாக இந்த வழக்கில் சம்பந்தபட்ட வழக்கறிஞர்கள் இன்று (SEP 17) ஆஜராக வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
   • அமெரிக்காவில் உள்ள 21 பெரிய நகரங்களில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சார்பில் நடந்த ஆய்வில், சுமார் 8 ஆயிரம் ஓரினச்சேர்க்கையாளர்கள் பங்கேற்றனர். அப்போது, ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் லெஸ்பியன்களில் ஐந்தில் ஒருவருக்கு (20 சதவீதம் பேருக்கு) எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது.
   • கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்க 2010-11ம் ஆண்டிற்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பயிர்கடன் பெற்று முறையாக செலுத்தியவர்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும - கலெக்டர் ஹரிஹரன் 
   • நீதிமன்றங்களில் உள்ள 95 சதவீத வழக்குகள் கீழ் நீதிமன்றங்களில்கூட விசாரிக்கத் தகுதியற்றவையாக உள்ளன என்று உச்ச நீதிமன்ற நீதிபதியும், சமரச தீர்வு மைய திட்டக் குழுவின் தலைவருமான ஆர்.வி.ரவீந்திரன் தெரிவித்தார்.
   • தனது இளைய மகன் தேஜஸ்வியை பயிற்சி அரசியல்வாதி என்று அறிமுகப்படுத்தி களத்தில் இறக்கி விட்டுள்ளார் முன்னாள் கிங் மேக்கர் லாலு பிரசாத் யாதவ்.
   • தில்லி ஜவாஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் உடைந்த பாலத்துக்குப் பதிலாக இரும்பால் ஆன பாலத்தை (பெய்லி பிரிட்ஜ்) ராணுவம் அமைக்கவுள்ளது.