செல்போன் சார்ஜர் மூலம் பெண்ணை கொலை செய்ய முயற்சி: கல்லூரி மாணவர்கள் கைது

26/11/2010 19:28

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் மனைவி கஸ்தூரி , கடந்த 15ம் தேதி மாலை இவர் வீட்டு வாசலில் டேப் சுற்றிய நிலையில் ஒரு செல்போன் சார்ஜர் கிடந்தது. அதனை எடுத்து சார்ஜர் போட்டபோது அது வெடித்து அவருடைய கண், மார்பு, வலது கையில் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அதே பகுதியிலுள்ள கம்யூனிஸ்ட் பிரமுகர் சாமிநாதன், கடந்த 21ம் தேதி அதிகாலை அவர் வீட்டு வாசலில் ஒரு சார்ஜர் கண்டெடுக்கப்பட்டது. அதை அவரது வீட்டில் சார்ஜர் போட்டபோது அதுவும் வெடித்து அவரது வலது கை விரல், அவரது முகம் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிசிக்சை பெற்றனர்.

இதையடுத்து குடியாத்தம் தாலுகா போலீசில் சாமிநாதன் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தட்டப்பாறையைச் சேர்ந்த யுவராஜ் மகன் நவீன்குமார், நடராஜன் மகன் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தட்டபாறை கிராமத்தை சேர்ந்த யுவராஜ் மகன் நவீன்குமார் (வயது 20) கல்லூரி மாணவர். அதே கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். அவருடைய நண்பர் கோவிந்தராஜ் (28). இருவரும் கஸ்தூரி வீட்டின் அருகே நின்று பள்ளி மாணவியை கேலி கிண்டல் செய்து வந்தனர்.
 
இதனை கண்ட கஸ்தூரி அவர்களை கண்டித்துள்ளார். அப்போது கஸ்தூரியை ஆபாசமாக பேசியுள்ளனர். பள்ளி மாணவிக்கு நவீன்குமார் தொடர்ந்து காதல் செய்ய வலியுறுத்தி தொல்லை கொடுக்க தொடங்கினார். இந்த விவகாரம் பள்ளி வரை சென்றது.
 
அந்த பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கம்யூனிஸ்டு பிரமுகர் சாமிநாதன் நவீன்குமார், கோவிந்தராஜை அழைத்து எச்சரித்துள்ளார்.
 
இந்த தகவலை பெற்றுக் கொண்ட போலீசார் கல்லூரி மாணவர்கள் இருவரை பற்றிய விசாரணையில் இறங்கினர். அதில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பாலிடெக்னிக் மாணவர் கொலையான வழக்கில் இருவரும் கைதானவர்கள் என்பதும் தெரியவந்தது.
 
இதனையடுத்து நவீன்குமார், கோவிந்தராஜ் இருவரையும் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது காதல் விவகாரத்தில் தலையிட்டதால் சாமிநாதன், கஸ்தூரியை கொலை செய்ய முடிவு செய்து செல்போன் சார்ஜரில் டெட்டனேட்டர் வைத்ததை ஒப்புக் கொண்டார். சித்தூரில் டெட்டனேட்டர் குச்சிகளை வாங்கியதையும் ஒப்பு கொண்டனர். மாணவர்களை இருவரையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

nakkheeran.in