செவ்வாய் கிரகத்தில் உறைபனி: நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

15/09/2012 00:57

 The Carbon Dioxide Snow On Mars வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் உறைபனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில் அதி உறைநிலையிலான கார்பன் டை ஆக்சைடு அல்லது உறைபனி தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உறைபனியானது எத்தகைய வெப்பநிலையில் உறைந்திருக்கக் கூடும் தெரியுமா? -125 டிகிரி செல்சியலில்தான் இது உறைந்திருக்க வேண்டும்.

செவ்வாய்க் கிரகத்து மேகங்களில் கார்பன் டை ஆக்சைடு கலந்து இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். செவ்வாய் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் குளிர்காலத்தில் இத்தகைய பனிப்பொழிவும் உறைபனியும் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

கடந்த 2008-ம் ஆண்டு செவ்வாய்கிரகம் பற்றியநாசாவின் ஆய்வுகளிலும் இத்தகைய உறைபனி வடபகுதியில் கண்டறியப்பட்டது.

இத்தகைய உச்சகட்ட உறைபனி வெப்பநிலையானது அனேகமாக சூரியக் குடும்பங்களில்செவ்வாய்கிரகத்தில் மட்டும்தான் இருக்கக் கூடும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்

NASA has 'clear evidence' of carbon dioxide snowfalls on Mars, the space agency revealed today - making this the only known example of carbon dioxide snow falling anywhere in our solar system.