சோமாலியாவில் கடும் வறட்சி - ஐ.நா உதவி

18/07/2011 10:10

altஅல்சகாபாப் நிர்வகிக்கும் சோமாலியா பகுதியில் ஐ.நா தனது முதல் நிவாரண உதவியை துவக்கி உள்ளது.

 

ஆப்பிரிக்கா பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதில் சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

 

யுனிசெப் அமைப்பு உணவு மற்றும் மருந்துகளை ஊட்டச்சத்து இல்லாத பாய்டோ குழந்தைகளுக்கு விமானம் மூலம் அனுப்புகிறது. தலைநகர் மொகாதிஷீவுக்கு வடமேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் இந்த பாய்டோ நகரம் உள்ளது.

 

சோமாலியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை அல்சகாபாப் பிரிவினர் நிர்வகித்து வருகின்றனர். ஐ.நா நிவாரண உதவிகளுக்கு தடை ஏற்படுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இந்த தகவலை சோமாலியாவில் உள்ள யுனிசெப் பிரதிநிதி ரோசானே சோர்ல்டன் தெரிவித்தார்.

 

அல்சகாபாப் பிரிவினர் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவை ஆட்சி செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிராந்தியத்தில் அயல்நாட்டு ஏஜென்சிகள் உதவிகளுக்கு அல்சகாப் தடை விதித்து இருந்தது. அல்சகாபாப் இயக்கம் அல்கொய்தாவுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

newonews.com