சோராபுதீன் வழக்கு: அமித்ஷாவுக்கு ஜாமீன்

29/10/2010 21:05

 

சோராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில், குஜராத் முன்னாள் அமைச்சர் அமித் ஷாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.

குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா, முதல்வர் நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். சோராபுதீன் என்கவுன்ட்டர் போலியாக நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அமித் ஷாவை சிபிஐ கைது செய்தது.

 

 

பின்னர், சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு மூன்று மாத காலத்திற்குப் பிறகு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மாதம் ஒருமுறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
nakkheeran.com