ஜும்ஆ வசூல் மருத்துவ உதவி

20/11/2009 17:00

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

 

20-11-2009

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை பள்ளியில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ வசூல் ரூ. 923.00. அதை அப்படியே கீழக்கரையைச் சேர்ந்த ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப் பட்ட பெண்மணிக்கு வழங்கப்பட்டது. 

கீழக்கரையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் காவல்துறையினரால் பொய் கேஸ் போடப்பட்டு கடந்த ஒருவருடமாக மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார் இந்நிலையில் அவரது தாயாருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையளிக்கப் பட்டு வந்தது. அவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமையில் முறையிட்டதன் பேரில் மாவட்டத்திலிருந்து ஜும்ஆ நடைபெரும் எல்லாக் கிளைகளுக்கும் அறிவிப்புச் செய்யப்பட்டு ஜும்ஆ வசூலை மொத்தமாக வசூலித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. 

மருத்துவ உதவி என்பதால் சகோதரர்கள் தாராளமாக உதவி செய்தனர்.