ஜுலை 4 மாநாடு - புதுவலசையில் இருந்து 3 வேன்களில் சென்ற மக்கள்

10/07/2010 11:05

10-07-2010

கடந்த 4ம் தேதியன்று சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் முஸ்லீம்களின் உரிமைப் பேரணி மாநாட்டில் கலந்து கொள்வதற்ககாக நமதூர் கிளையில இருந்து சுமார் 50 பேர் ஆண்களும் பெண்களுமாக 3 வேன்களில் சென்று கலந்து கொண்டனர். 2 வேன்கள் ஆண்களுக்கும் 1 வேன் பெண்களுகளுக்கும் ஏற்ப்பாடு செய்திருந்தது புதுவலசை கிளை.

அல்லாஹ்வுடைய மாபெரும் கருணையால் அலைகடலென ஆண்களும், பெணகளும், குழந்தைகளும் மற்றும் முதியவர்களும் பல்வேறு ஜமாஅத்தை சேர்ந்தவர்களும் அரசியல் பிரமுகர்களும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு நிர்வாகிகள் என இலட்சக்கணக்கான மக்கள் களந்து கொண்டனர். இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் ஒரு கோரிக்கையை முன் வைத்து இவ்வளவு பெரிய மாநாடு நடைபெற்றது இதுதான் முதல் முறை என்ற அளவுக்கு அல்லாஹ் இந்த மாநாட்டுக்கு வெற்றியை தந்துள்ளான் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருனுக்கே....

அதே சமயம் மாநாடு முடிந்து இரண்டாம் நாள் 6-7-2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த நிர்வாகிகள் சகோதரர் ஜே.எம். ஹாரூன் மூலமாக பிரதமர் மன்மோகன் சிங்கையும் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியையும் சந்தித்து மாநாட்டு கோரிக்கையை எடுத்துரைத்து விட்டு வந்துள்ளனர். அவர்களும் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு உறுதி செய்யும் வகையில் பதிலளித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.....