ஜெ பதவியேற்றவுடன் துவங்கிய அதிகாரிகள் மாற்றம்

17/05/2011 15:34

1. முதலில் சட்டப் பேரவை சென் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது இதற்கு வைகோ மற்றும் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர்

 

2. சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த டி.இராஜேந்திரன் பதவி மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக ஜே.கே.திரிபாதி புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

3. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இரு‌ந்த ஷீலா ராணி சுங்கத் இடமாற்றம் செய்யப்பட்டு, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.


4. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கே.அசோக் வரதன் ஷெட்டி மாற்றப்பட்டு, ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி சிறப்பு ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

5.  சட்டப் பேரவைச் செயலராக திரு. ஜமாலுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.