ஜெர்மனியில் வாழ்வதாக இருந்தால் முஸ்லிம்கள் சரியத் சட்டத்திற்கு கட்டுப்படக் கூடாது - ஏஞ்சலோ

07/10/2010 16:04

ஜெர்மெனியில் வாழ்வதாக இருந்தால் முஸ்லிம்கள் நாட்டு அரசியல் சட்டத்திற்க்கு கட்டுப்பட வேண்டும் சரியத் சட்டத்திற்ககு அல்ல என்று அந்நாட்டு கத்தோலிக்க கட்சியின் தலைவரான சான்சலர் ஏஞ்சலோ மெர்கள் தெறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே மேற்கத்திய நாடுகள் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து தெறிவிப்பதும் சட்டம் இயற்றுவதும் தொடர்ந்துவருகிறது. அதன் ஒருபகதியாக ஜெர்மனியிலும் இஸ்லாமிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதில் தொடர்புடையவர்கள் ஜெர்மனியில் இருந்து திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்து அங்கு ஒரு பள்ளவாசலுக்கு பூட்டுப் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்றல் பேங்க் பகுதிமக்கள் முஸ்லிம்கள் மற்றவர்களுடன் இனக்கமாக நடந்துகொள்வதில்லை என கூறிவருகின்றனர். அதிபர் கிரிஸ்டியன் உல்ஃப் முஸ்லிம்கள் பற்றிய அறிக்கையில் ஜெர்மானியர்கள் இஸ்லத்தை ஜெர்மனியின் ஒரு அங்கமாக மக்கள் ஏற்றுக்கெள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள சர்ச்சையில் ஏஞ்சலோ மெர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

அதிபர் உல்ஃப்பின் கருத்துக்களை கடுமையாக சாடியுள்ள ஏஞ்சலோ ஜெர்மனியில் முஸ்லிம்கள் 4 மில்லியன் முஸ்லிம்கள் வாழும் நிலையில் அவர்கள் ஜெர்மனியின் அரசியல் சட்டத்திற்க்கு மட்டுமே கட்டப்பட வேண்டும் என்றும் இஸ்லாத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

ஜெர்மனிக்கு இமாம்கள் தேவை என்றும் அவர்கள் ஜெர்மன கலாச்சாரத்துடன் இணைந்த கல்வி கற்றவர்களாகவும் ஜெர்மானியர்களாகவும் இருக்கவேண்டும் என்றார். மேலும் ஜெர்மன் கலாச்சாரம் கிருஸ்தவ மற்றும் யூத மத உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்றார்.

https://gulfnews.com/news/world/other-world/german-muslims-must-obey-law-not-sharia-merkel-1.693025