ஜேர்மனியில் 2022 ஆம் ஆண்டு அனைத்து அணு உலைகளும் மூடப்படும்

01/06/2011 16:49

ஜேர்மனியில் இன்னும் 11 ஆண்டுகளில் அனைத்து அணு உலைகளும் மூடப்படுகினறன.

அரசின் புதிய முடிவுப்படி அனைத்து அணு உலைகளும் 2002 ஆம் ஆண்டில் செயல் இழந்து விடும். ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த மார்ச் மாதம் 11 ஆம் திகதி ஏற்பபட்ட நில நடுக்கம் காரணமாக முதன்மை அணு மின் நிலையம் பாதிக்கப்பட்டது. அந்த அணு மின்நிலையத்தில் ஹைட்ரஜன் வெடிப்பு ஏற்பட்டதால் கதிர்வீச்சும் பரவியது. இதன் காரணமாக பல மாதங்கள் ஜப்பான் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளளார்கள்.

 

ஜப்பான் அணு துயரம் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஜேர்மனியிலும் அணு மின்சார திட்;டத்திற்கு அரசியல் தலைவர்கள் பொது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து அணு மின் நிலையங்களும் வருகிற 2022 ஆம் ஆண்டு மூடப்பட்டு விடும் என ஏங்கலா மார்கெல் அரசு திங்கட் கிழமை அறிவித்தது.

 

இந்த அறிவிப்பை பெடரல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நோபர்ட் ராட்கென் அறிவித்தார். அதிபர் ஏங்கலா மார்கெலின் கிறிஸ்டியன் டெமாக்கரேட்ஸ் (சிடியு) கட்சியும், இளைய கூட்டணி கட்சிகளும் 12 மணி நேரம் நடத்திய மரத்தன் கூட்டத்திற்கு பின்னர் ஜேர்மனியின் அனைத்து அணு மின் நிலையங்களையும் 11 ஆண்டுகளில் மூட முடிவு செய்யப்பட்டது.

 

கடந்த அக்டோபர் மாதம் ஜேர்மன் நாடாளுமன்றத்தில் அணு மின் நிலையங்களை மூடுவதற்கு 2036 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ள ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஜப்பான் அணு மின் நிலைய துயரத்திற்கு பின்னர் இந்த அணு மின் நிலையங்களை விரைவில் மூட ஜேர்மனி முடிவு எடுத்துள்ளது. ஜேர்மனியில் உள்ள அணு மின் நிலையங்களை வருகிற 2015 ஆம் ஆண்டிலேயே மூட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.

newsonews.com

 

ஜெர்மனியைத் தொடர்ந்து பிராஸிலும் அணு உலை குறித்த சர்ச்சை துவங்கியுள்ளது. ஆனால் இந்தியா போன்ற நாடுகள் இப்போதுதான் அந்தப் பணியைத் துவக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.