டாக்டர் லியாக்கத் அலி கைது செய்யப்பட்டார்

31/07/2010 11:22

31-07-2010    

நமதூர் டாக்டர் லியாக்கத் அலி அவர்கள் போலி டாக்டர்கள் பிடிக்கப்பட்ட பயத்தால் சில காலம் தலைமறைவாக இருந்தார். பின் தன் மருத்துவத்தை மிக ரகசியமாக தொடர்ந்து செய்து வந்தார். ஹோமியோபதி படிப்பை முடித்து விட்டு அலோபதி மருத்துவம் செய்வதாக அவர்மீது உள்ள புகாரின் பேரில் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 8 மணியளவில் டாக்டர் லியாக்கத் அலி அவர்கள் போலிசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். அவா் தப்பிக்க முயன்றதாகவும் செய்திகள் தெறிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட டாக்டர் லியாக்கத் அலி நேற்று இரவே விடுவிக்கவும் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.