டிப்ளமோ என்ஜினியரிங் முடித்தவர்களுக்கு பி.இ பி.டெக் படிக்க அறிய வாய்ப்பு - 19-10 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

06/10/2010 14:42

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான (மாலை நேர வகுப்புகள்) விண்ணப்பங்கள், தேர்வு மையத்தில் வழங்கப்படுகின்றன. 

பொதுப்பிரிவு மாணவர்கள் 500 ரூபாயும், எஸ்.சி., - எஸ்.டி., - எஸ்.சி.ஏ., மாணவர்கள் 250 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 19ம் தேதி மாலை 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர விரும்புபவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குறிப்பிட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். இப்படிப்பு மூன்றரை ஆண்டுகள் (ஏழு செமஸ்டர்கள்) வழங்கப்படும்.

வார நாட்களில் மாலை 6:15 மணி முதல் 9:15 மணி வரை வகுப்புகள் நடைபெறும். பேராசிரியர்களின் முடிவுக்கு ஏற்ப, ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடைபெறும். 

பல்கலையிலிருந்து 90 கி.மீ., தொலைவுக்குள் பணிபுரிபவர்கள் மட்டுமே, இந்த பகுதி நேர பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர்த்து கொள்ளப்படுவர். 

வயது உச்சவரம்பு கிடையாது.

டிப்ளமா தேர்வு மதிப்பெண் 75 சதவீதம், பணி அனுபவம் 25 சதவீத அடிப்படையில் தகுதி கணக்கிடப்பட்டு, ‘மெரிட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் ( www.annauniv.edu/ptbe2010 ) தெரிந்து கொள்ளலாம்.