டைம் பத்திரிக்கையின் வாக்கெடுப்பு - அதிக 'No' பெற்று மோடி முதலிடம் !

09/04/2012 11:20

பிரபல ஆங்கில இதழான 'டைம்' நடத்திய 2012ஆம் ஆண்டின் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்களை முடிவு செய்யும் வாக்கெடுப்புக்கான போட்டியில் குஜராத் முதல்வர் மோடியின் பெயரும் இடம் பெற்றிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் 2,66,684 'No Way' வாக்குகள் பெற்று 'No' வாக்குகள் பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்திலும், 2,56,792  'Definitely' வாக்குகள் பெற்று ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். அநாமதேயமான ஒருவர் 3,95,793 'Definitely' வாக்குகள் பெற்று ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தையும் 2,64,193 வாக்குகள் பெற்று  இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். குஜராத் முதல்வர் மோடி நேற்று வரை ஆமோதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இ-மெயில்களை மோடி அனுப்பியுள்ளதாகவும், அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் உலகில் எந்த தலைவரும் இது போன்ற மோசடி செய்ததில்லை என்றும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குற்றம்சாட்டி இருந்தமை நினைவுகூறத்தக்கது.


Read more about டைம் பத்திரிக்கையின் வாக்கெடுப்பு - அதிக 'No' பெற்று மோடி முதலிடம் ! [4202] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com

 

View the list of Result in https://www.time.com/time/specials/packages/article/0,28804,2107952_2107959,00.html