டோனி பிளேர் மீது முட்டை வீச்சு

05/09/2010 13:04

அயர்லாந்தின் டப்ளின் நகருக்குச் சென்ற பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.

ஆனால் முட்டையோ, ஷூவோ அவர் மீது படவில்லை. டோனி பிளேர், பிரிட்டிஷ் பிரதமராக இருந்தபோது அமெரிக்காவுடன் இணைந்து இராக்கில் போரை நடத்தியது உள்ளிட்ட தனது நினைவுகளை தொகுத்து "மை ஜர்னி' என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை வெளியிடுவதற்காக அயர்லாந்தின் டப்ளினில் உள்ள புத்தக கடைக்கு டோனி பிளேர் சனிக்கிழமை வந்தார். இராக்போருக்கு எதிரானவர்கள் டோனி பிளேரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தகக் கடையின் இருபுறமும் திரண்டிருந்தனர்.

பிளேர் காரில் வந்திறங்கியதும் போராட்டக்காரர்கள் அவர் மீது முட்டை மற்றும் ஷூவை வீசினர். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக கடைக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். (Dinamani)

டோனி பிளேயர் கடந்த சில நாட்களாகவே முஸ்லிம்கள் பற்றியம் இஸ்லாம் பற்றியும் வெறுக்க தக்க கருத்துக்களை கூறிவருகிறார். தீவிரம்மாக இஸ்லாமிய மார்கத்தை கடைப்பிடிப்பவர்களால் உலகிற்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் தமது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொண்டு விட்டதாகவும் அண்மையில் அவர் சம்மந்தமாக செய்திகள் வெளியாகி இருந்தன. அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இராக் போர் மற்றுமின்றி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சித்தும் எழுதியிருப்பது தெறிகிறது. இராக்கில் நடந்த கொடுமைகளை சாதனையாக குறிப்பிட்டும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கட்சியை சார்ந்த முன்னால் பிரதமர் கர்டன் ப்ரௌனையும் இது சம்மந்தமாக விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.