தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவுக்கு புதிய தலைவர்: தமிழக அரசு அறிவிப்பு

31/10/2010 10:44

தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ரவிராஜ பாண்டியன் நியமனம் செய்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டள்ளார்.
 

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஓய்வு பெற்ற நீதியரசர் கே. கோவிந்தராஜன் தலைமையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டு, 7.12.2009 அன்று அரசால் ஆணையிடப்பட்டது. 

நீதியரசர் கோவிந்தராஜன் தமது உடல்நலன் கருதி, தமது பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, பணி விலகல் கடிதத்தினை அரசுக்கு அனுப்பியுள்ளதைத் தொடர்ந்து, அவரது  பணி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டு; ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கே. ரவிராஜ பாண்டியன் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று முதல்வர் கருணாநிதி இன்று (30.10.2010) அறிவித்துள்ளார். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Nakkheeran.in