தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் பல் டாக்டர்கள் நியமனம்

31/10/2010 10:32

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.பல் மருத்துவ கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விழாவில் கே.எஸ்.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் டாக்டர் கே.எஸ்.ரங்கசாமி தலைமை தாங்கினார்.
 
விழாவில் சிறப்பு விருந்தின ராக தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர். கனகசபை கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அவர்,’’உங்களிடம் நிறைய திறமைகள் உள்ளன. போட்டி நிறைந்த உலகில் முன்னேறுவதற்கு மொழி களை அதிகம் கற்று கொள்ள வேண்டும்.
நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அடுத்தவர் மதிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோரை மதிக்க வேண்டும். நோயாளிகளை கனிவுடன் கவனிக்கவேண்டும்.
 
1947-ல் 45 வருடங்களாக இருந்த மனிதனின் சராசரி ஆயுள், இப்போது 65 வயதாக உள்ளது. தற்போது மக்கள் நோய்பற்றிய விழிப் புணர்வு, கம்ப்யூட்டர் வசதி, ஆகியவற்றின் மூலம் அதிக விழிப்புணர்வு பெற்று உள்ளனர். உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவில் ஆயுலை குறைத்தால் ஆயுள் கூடும்.
 
டாக்டர்களாகிய நீங்கள் தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்ய வேண்டும். மனஅமைதி, பணம், பதவியால் கிடைக்காது. நிம்மதித்தான் முதல் சொத்து.
 
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பல்மருத்துவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல் மருத்துவர்கள் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய ம்க்கள் தொகைக்கு ஏற்ப பல் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சிறந்த வேலைவாய்ப்பு அனை வருக்கும் உள்ளது’’என்று பேசினார்.

Nakkheeran.in