தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்கைகள்

15/04/2011 21:03

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையை பொறுத்தவரை இரண்டு முக்கியமான அடிப்படையை கொண்டது.  


1 . ஏகத்துவம் (நன்மையை ஏவுதல் தீமையை தடுத்தல்) - மார்க்கப்பணி

 • அல்லாஹ்வை மட்டும் வணங்குவது அவனது தூதர் நபி (ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுவது,
 • திருமறை குரான் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மட்டும் இஸ்லாத்தின் மூல ஆதாரமாக கொள்வது,
 • அதன் அடிப்படையில் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் நடைமுறை படுத்துவது,
 • இஸ்லாத்தை நடைமுறைப்படுத்துவதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதது,
 • தவறான கொள்கையுடையோருக்கு சத்திய மார்க்கத்தை எடுத்துரைத்தல், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை உரியமுறையில் எதிர்கொள்வது,
 • தர்கா, மௌலீது போன்ற மார்கத்திற்கு புறம்பான சிர்க் (இறைவனுக்கு இணைவைத்தல்) மற்றும் பிதுஅத்க்கு (இஸ்லாத்தில் புதிதாக உருவான அனச்சரங்கள்) எதிராக பிரச்சாரம் செய்து சமூக மக்களை நிரந்தர நரகத்தில் இருந்து காத்து சுவர்க்கம் என்ற நேர்வழியின்பால் அழைப்பது,
 • இஸ்லாத்தை தவறாக விளங்கிக்கொண்டு இனவுணர்வின் அடிப்படையில் தவறான பாதையை நோக்கி இளைஞர்கள் செல்வதை தடுத்து இஸ்லாத்தின் உண்மை நிலையை புரியவைப்பது,
 • இஸ்லாத்தை முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதோருக்கு எடுத்துரைப்பது, கருத்து வேறுபாடு கொண்ட முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்களிடம் திருமறைக் குரான் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாம் அனுமதித்த வரம்புக்கு உட்பட்டு  விவாதம் செய்வது,
 • வரதட்சணை போன்ற சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவது, அதனால் ஏற்படும் எந்த பிரச்சனையையும் சகித்துக்கொள்வது போன்ற மார்க்கப் பணிகளையும். 

 

2 . சமுதாயப்பணி

 

 • முஸ்லிம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் உரிமைக்காகவும் பாடுபடுவது, கல்வி, வேலைவாய்ப்புக்கு உதவி செய்வது மற்றும் வழிகாட்டுவது,
 • அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது, அதற்காக பல்வேறு போராட்ட களங்களை ஜனநாயக முறையில் சந்திப்பது,
 • சமுதாய தேவைகளுக்காகவும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் முஸ்லிம் விரோதபோக்கை எதிர்த்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்த்தும், மதவாத சக்திகளை எதிர்த்தும் சமுதாயத்தை பாதுகாக்கவும், உரிமையை மீட்டெடுக்கவும் போராடுவது,
 • பாபர் மசூதி மற்றும் இடஒதுக்கீடு போன்ற சமுதாயத்தின் முக்கியமான பிரச்சனைகளுக்கு மக்கள் சக்தியை திரட்டி ஆளும் வர்கத்திற்க்கு நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பேரணி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்துவது,
 • இரத்த தானம், ஆம்புலன்ஸ், போன்ற பொதுவாக எல்லா மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் சமூக தொண்டாற்றுவது. (இரத்த தானத்தில் தொடர்ந்து பல வருடங்களாக மாநிலத்திலேயே முதலிடத்தில் இருப்பது குறிப்பிட தக்கது)
 • சமுதாய மக்களையும் அவர்களின் ஆதரவையும் காட்டி எந்த அரசியல் கட்சியிடமும் சமூகத்தை அடகு வைக்கத வகையிலும், தற்போதுள்ள மோசமான அரசியல் சூழ்நிலையில் எந்த சீட்டுக்ககவும், பதவிக்காகவும் தமது தனித்தன்மையை இழக்காத வகையிலும் எந்த பதவிக்கும் எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை எனவும்,
 • தேர்தல் வந்தால் அனைவரும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டிய நிலை உள்ளதால்  சமூகம் சார்ந்த ஏதேனும் ஒரு கோரிக்கையை மையமாக வைத்து அதை ஆளும் கட்சியோ அல்லது எதிர்கட்சியோ நிறைவேற்றினால் அந்த கட்சிக்கு தமது ஆதரவை தெரிவிப்பதும் என்ற சமுதாயத்தின் வாக்கு வங்கிகளை சமுதாயத்தின் தேவைகளுக்காக பயன் படுத்திக்கொள்வது என்ற அரசியல் நிலைபாட்டையும் கொண்டுள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.