தமுமுகவின் முன்னால் மாவட்ட தலைவர் சகோ. சலீமுல்லா கான் அவர்கள் TNTJ வில் இணைந்தார்

16/07/2012 09:38

 

கண்ணியமும் பாக்கியமும் பொருந்திய அல்லாஹ் சுப்ஹானஹீத்தாலாவின் திருப்பெயரால்....

தமுமுகவின் முன்னால் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்த சகோதரர் சலீமுல்லா கான் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் நேற்று TNTJ மாநிலச் செயலாளர்கள் சகோதரர் யூசுப் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் இணைந்தார்.

இது பற்றிய மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வரும் செய்தி, கடந்த சில நாட்களாகவே இந்த முடிவு குறித்து அவர் மாநிலத் தலைவர் சகோதரர் பீஜே அவர்களிடம் நேரடியாகப் பேசியதாகவும், தமுமுக வினருக்குக் கூட இது பற்றி அவர் தெரிவித்ததாகவும் தெறிகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன் அவர் வகித்து வந்த மமகவின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பும் செய்துள்ளனர் மமக நிர்வாகிகள்.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம், அவன் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகிறான்.