தவ்ஹீத் ஜமாஅத் கிளை பொதுக்கூட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்த மசூரா

19/01/2011 12:21

கடந்த 9-1-2011 அன்று மாலை இஷா தொழுகைக்குப் பின் நமதூர் TNTJ மர்கஸில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், வட்டியில்லா கடன் உதவித்திட்டக் கணக்குகள், மர்கஸ் கணக்குகள் மற்றும் ஜமாஅத் கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. நிர்வாகத்தில் இருந்த வெற்றிடங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்னர். அதன்படி துணைத்லைவராக சகோதரர் ஷாஜஹான் அவர்களும் துணைச்செயலாளராக சகோதரர் சமீனுல்லா அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

 

தாஃவா பணியை தொய்வின்றித் தொடர நமதூருக்கு ஒரு தாயியை நிரந்தரமாக வேலைக்கு வைக்க ஆலோசனை செய்யப்பட்து. அதற்குத் தேவையான பொருளாதராத்தை எவ்வாறு திறட்டுவது என்பது பற்றியும் ஆலோசனை செய்து. உறுப்பினர்களிடம் மாதச் சந்தா முறையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. மேலும் தாவா பொருப்பாளர்களாக சகோ. அர்சத் அலி, சகோ. முஹம்மது யாசின் மற்றும் சகோ. முஹம்மது பவாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இறுதியாக ஜனவரி 27 மதுரை பேரணி ஆர்ப்பாட்டக்களத்திற்கு தேவைாயன ஆலோசனைகளும், வாகன ஏற்பாடு மற்றும் பொருளாதாரத்தை திறட்டுவது சம்மந்தமான கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. மேலும் மக்களுக்கு இப்போராட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை சம்மந்தமாகவும் ஆலோசிக்கப்பட்டது.