தவ்ஹீத் ஜமாஅத் திடல் தொழுகை மற்றும் ஃபித்ரா 2011

31/08/2011 23:27

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்....

 

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் அக்பர்!! அல்லாஹ் அக்பர்!!!

நமதூர் தவ்ஹீத் ஜமாஅத் இந்தவருடம் காயிதே மில்லத் நகரில் வாங்கப்பட்ட புதிய இடத்தில் வேலி அமைத்து திடல் தொழுகைக்கு ஏற்பாடு செய்து இருந்தது. வழக்கம் போல் எதிர்பார்த்ததை விட அதிகமான மக்கள் திரளாக கலந்துகொண்டனர். சகோதரர் ரஹ்மான் அலி பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.

ஃபித்ரா வினியோகம்

நேற்று நடைபெற்ற பித்ரா வினியோகத்தில் சுமார் 25 ஆயிரம் (உள்ளூர் தவ்ஹீத் சஹோத்தரர்கள் மூலம் வரவு 10400 + 4550 தலைமை வரவு 10000) மதிப்புள்ள பொருட்களும் பணமும் சுமார் 88 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. பித்ராவாக இறைச்சிக்கு 200 ரூபாயும் , அரிசி , மல்லிகை பொருட்களும் வழங்க பட்டது .