தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்: ஸ்தம்பித்தது சென்னை... ஆடிப் போனது அமெரிக்க தூதரகம்!

15/09/2012 22:03

 

 Muslim S Protest Halt Chennai Hours சென்னை: நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து சென்னையில் இன்று அமெரிக்க தூதரக முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர்.

அமெரிக்க அதிபர்

ஒபாமா, வெளியுறவு அமைச்சர் ஹிலாரி ஆகியோரின் உருவப்படங்களை கிழித்து எரிந்தனர்.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் பி.ஜே கண்டன உரையாற்றினார்.

TNTJ, an Islamic party of the state's strong protest against US consulate office caused for a heavy traffic jam in the city for hours.

oneindiatamil.in