தவ்ஹீத் மர்கஸ் நோன்புக்கஞ்சிக்கு ரூபாய் 2500 நிர்ணயம்

07/04/2012 22:06

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இன்ஷா அல்லாஹ் இந்தவருடம் ரமாளானில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை மர்கஸில் நோன்புக் கஞ்சி காய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காயிதேமில்லத் நகர் மக்களும், நோன்பு திறக்க மர்கஸுக்கு வருபவர்களும் பயன் பெரும் வகையில் செய்வதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒரு கஞ்சிக்கு ரூபாய் 2500 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

 

இந்தவகைக்காக தங்களை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் உங்களது பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளைசார்பில் கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்.