தவ்ஹீத் மர்கஸ் விரிவாக்கப் பணி

16/07/2012 21:47

அல்லாஹ்வின் திருப்பெரால்...

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் நமது புதுவலசை தவ்ஹீத் மர்கஸ் மீண்டும் விரிவாக்கப் படுகிறது. மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காகவும், இளம் தலைமுறையினருக்கும் இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவில் எடுத்துரைப்பதற்காகவும் ஒரு இமாமை நிரந்தரமாக வைக்க தேவையான நடவடிக்கைகளில் புதுவலசை தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் இறங்கியுள்ளது. மேலும் இந்த வருடம் முதல் ரமளானில் நோன்புக் கஞ்சி காய்ச்ச இருப்பதால் அதற்காகவும் சேர்த்து தவ்ஹீத் மர்கஸ் தற்போதுள்ள செட்டை சற்று விரிவாக்க முடிவு செய்து வேலைகள் நடைபெற்று வருகிறது.

இமாம் தங்குவதற்கு ஒரு அறையும் நோன்புக் கஞ்சி காய்ச்ச தேவையான அளவுக்கு செட்டை விரிவாக அமைக்க வேலைகள் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் வெளிக் கதவு சேதமடைந்ததைத் தொடர்ந்து நம் சகோதரர் ஒருவரின் உதவியில் வெளிக்கேட்டை மாற்ற சற்று சுவரை நீட்டி கதவு போடப்பட்டுள்ளது.