தாசின் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட இருந்த திருக்குர்ஆன் ஓதும் போட்டியை நிறுத்திய ஜமாஅத் நிர்வாகிகள்

06/08/2011 14:27

நமதூரில் கடந்த 3 வருடங்களாக தாசின் அறக்கட்டளை சார்பில் ரமளானில் திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடைபெற்று வந்தது. இந்த வருடத்திற்கான போட்டி இன்று மலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கப்பட இருந்தது. வழக்கம்போல் பத்திரிக்கை அடித்து ஜமாஅத் மற்றும் சங்கத்திற்கு முறையாக கொடுத்து எல்லா ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு இன்று மாலை நிகழ்ச்சி துவக்க இருக்கைகள் உட்பட்ட ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் பொழுது. பள்ளிவாசல் மைக்கில் நிகழ்ச்சி அவசரமாக நிறுத்தப்படுவதாக அறிவிப்புச் செய்யப்பட்டது. இதை தாசி்ன் அறக்கட்டளை நிறுவனருக்கோ அல்லது நிர்வாகிக்கோ முறையாக தெறிவிக்கப்படவும் இல்லை எனவே சகோதரர் தாசின் நிகழ்ச்சியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெறிகிறது.

 

ஜமாஅத் நிர்வாகிகளின் இச்செயலுக்கு பத்திரிக்கையில் பெயர் போவது் சம்மந்தமான காரணமாக இருக்கலாம் என தெறிகிறது. ஆனால் இதற்கு சங்கத்தினரும் உதவியாக இருந்திருக்கிறார்கள்.

 

போட்டியில் கலந்து கொள்ள இருந்த மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மிகந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஆரம்பம் முதலே தற்போதைய நிர்வாகமும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பது நினைவிருக்கலாம். சில நாட்களுக்கு முன்பு கூட நோன்புக்கஞ்சி மற்றும் ஓதுபவர்களுக்கான அனைத்துப் பொருட்களும் அல் மஸ்ஜிதுல் அக்பர் பள்ளியில் இருந்துதான் அல் மஸ்ஜிது ஜாமியாவுக்கு வர வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.

போனவருடம் நடந்த பிரச்சனைகளை நாம் அப்போதும் நம் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தது நனைவிருக்கலாம். ரமளான் வந்துவிட்டால் வழக்கமாகிவிடும் பள்ளிவாசல் பிரச்சனை

 

அணுவளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார் அணுவளவு தீமை செய்தவர் அதைக் காண்பார் திருமறை குர்ஆன் 99-7,8