தாசின் அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு குரான் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா

18/08/2012 14:46
தாசின் அறக்கட்டளையின் சார்பாக நமதூரில் 4 ஆம் ஆண்டு குரான் ஓதும் போட்டி நடைபெற்றது. இதில் இன்று பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஜனாப்.அஹ்மத் அமீன் ஆலிம் அவர்கள் கிராத் ஓதி ஆரம்பம் செய்தார்கள்.. ஜமாஅத் தலைவர் கபீர் அவர்கள் முன்னிலை வகித்தார்கள் மற்றும் ஜமாஅத்தினர்களும், ஊராட்சி மன்ற தலைவி திருமதி ஹாஜி சலினா அவர்களும் கலந்து கொண்டனர்.
 
அதனை தொடர்ந்து ஜனாப்.காதர் இஸ்மாயில் ஆலிம் அவர்கள் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்கள், சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பயன் பெரும் வகையில் நமது அன்றாட வாழ்வில் உபயோகம் செய்யும் வார்த்தைகள் பற்றியும், உதாரணமாக பிஸ்மில்லாஹ். ஜசக்கலாகுல் ஹைர், அல்ஹம்துலில்லாஹ் , அஸ்ஸலாமுஅலைக்கும் போன்ற வார்த்தைகளை சிறுவர்களுக்கு கற்று கொடுத்து அதனை அன்றாடம் சொல்ல வைக்க வேண்டும் எனவும் அதனை உதாசினம் செய்யாமல் பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டும் எனவும், நமதூரில் நல்ல கல்விக்கூடம் இருக்கும் நிலையில் வெளியூர்களுக்கு சென்று மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள் அதுமட்டுமல்லாது அவர்கள் வெளியூர் செல்வதால் சீக்கிரமாக செல்லவேண்டிய நிலை இருப்பதால் ஓதும் பள்ளிக்கு தாமதாமாகவும் வந்து சீக்கிரமாக செல்லவும் செள்ளவேன்ன்டிய நிலை இருக்கிறது இதனால் அவர்கள் மார்க்க கல்வியை கற்றுக்கொள்ளும் நிலை மிகவும் மோசமான நிலைமியில் உள்ளது என உரை நிகழ்த்தினார்கள்.
 
பின் ஜனாப் தைப் கான் அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார்கள்.. பின் பரிசுகள் வழங்கப்பட்டது இந்த பரிசளிப்பில் மொத்தம் 4 பிரிவுகளாக A,B,C & மழலையர் என்று பிரிக்கப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொருவருக்கும் முதலிடம், இரண்டாம் இடம் , மூன்றாம் இடம் , மற்றும் ஊக்க பரிசு வழங்க பட்டது, போட்டியில் கலந்த அனைவருக்கும் பரிசுகள் வளங்கப்பட்டது.

 
 

அதனை தொடர்ந்து தாசின் அறக்கட்டளையின் பொறுப்பாளர் M,K. முஹம்மத் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்கள்.