திருகோணமலையில் முஸ்லிம் குடியிருப்புகள் மீது பாதுகாப்புத் தரப்பினர் தீ வைப்பு

02/11/2010 09:59

கிண்ணியா கண்டக்காடு பகுதியில் மீளக்குடியேறிய மக்கள், இன்று காலை பொலிஸாரால் தாக்கப்பட்டதையடுத்து, அங்கிருந்து வெளியேறி அல்-அதான் வித்தியாலயத்தில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

இவ்வாறு தஞ்சமடைந்த 213 குடும்பங்களுள் 152 முஸ்லிம் குடும்பங்களும், 61 தமிழ் குடும்பங்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

இன்று காலை நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்த மக்கள் வெளியேறிய பின், சுமுகமான சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்க அதிபரின் அனுமதியுடன் மீளக்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களே இவ்வாறு பொலிஸாரால் விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

மீளக்குடியேறிய மக்களின் 20 இற்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதோடு பள்ளிவாசல் முற்றுமுழுதாக நாசமாக்கப்பட்டுள்ளது.

tamilwin.com