திருச்சியில் புதிய ஐ.ஐ.எம் கல்லூரி அடுத்தமாதம் திறக்கப்பட உள்ளது

18/05/2011 09:04

"திருச்சியில் அடுத்த மாதம் 60 மாணவர்கள் கொண்ட புதிய ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனம் திறக்கப்படுகிறது' என, இதன் இயக்குனர் டாக்டர். பிரபுல்ல அக்னிகோத்ரி தெரிவித்தார். திருச்சியில் திறக்கப்பட உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்திற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும், தயார் நிலையில் உள்ளன. 12 பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கு மாணவ, மாணவியர் 60 பேர் சேர்க்கப்படுவர். இவர்களில், 27 பேருக்கு, ஏற்கனவே, "அட்மிஷன்' வழங்கப்பட்டுள்ளது. நிதி மற்றும் கணக்கியல், மார்க்கெட்டிங், மனித வளம் மற்றும் ஆர்கனைசேஷனல் பிஹேவியர், மேனேஜ்மென்ட் இன்பர்மேஷன் சிஸ்டம் போன்ற முதுகலை படிப்புகளுக்கு, முதல் பேட்ஜ் துவக்கி, பாடம் கற்பிக்க, பேராசிரியர்கள் தயார் நிலையில் உள்ளனர். இவ்வாறு அக்னிகோத்ரி கூறினார்.

தினமலர்