திருமணமாகாத முஸ்லீம் தம்பதிகள் - வெளியேற்றும் மலேசிய அரசு

23/08/2010 09:43

மலேசியாவில் அரசு குடியிருப்புகளில் திருமணம் ஆகாமல் ஜோடியாக தங்கியிருக்கும் முஸ்லீம் ஜோடிகளை அரசு வெளியேற்றத் தொடங்கியுள்ளதாம்.

மலேசிய அரசு சட்டவிரோதம செயல்களற்ற புத்ரஜெயா-2010 என்ற திட்டத்தை நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஜோடியாக தங்கியிருக்கும், திருமணமாகாத முஸ்லீம் ஜோடிகளை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.

மலேசியாவின் நிர்வாகத் தலைநகரமாக விளங்குகிறது புத்ரஜெயா. அந்த நகரில் சட்டவிரோத செயல்கள் எதுவும் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ள தீவிரமாக உள்ளது மலேசிய அரசு.

இந்தத் திட்டத்தின்படி புத்ரஜெயாவில் உள்ள அரசு குடியிருப்புகளில் திருமணம் செய்யாமல் ஜோடியாக தங்கியிருப்போரை குறிப்பாக முஸ்லீம் ஜோடிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கை மிகவும் கடுமையானது என்றாலும் நாங்கள் இந்த விஷயத்தில் கடுமையாக இருப்பதை அனைவரும் உணர வேண்டும் என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

thatstamil.com