திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia

20/09/2012 11:29

 

திரைப்படம் தயாரித்தவன் மீதும் Youtube மீதும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நடிகை Lee Garcia

 

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த Lee Garcia என்ற நடிகை ” படத்தின் தயாரிப்பாளர் மற்றும் Youtube மீது நேற்று (19-9-2012) லாஸ் ஏன்ஜல்ஸ்  Superior  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில்,  படத்தின் தயாரிப்பாளர் Nakoula Basseley Nakoula மீது மோசடி மற்றும் அவதூறு புகார்களை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொலை மிரட்டல்கள் வர காரணமாக உள்ள அந்த வீடியோவை Youtube முழுவதுமாக நீக்க கோர்ட் உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோவின் காரணமாக தனது வேலை போய் விட்டதாகவும், தனது பேரக் குழந்தைகளை பாராமறிக்க அனுமதி மருக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படும் குறித்து அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.

 
 

Print This page